உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

திருமங்கலம், ; செப்., 7ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நடைபெறும் ஊர்வலம் குறித்து திருமங்கலத்தில் ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி., அருள் முன்னிலை வகித்தார். தாசில்தார் மனேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயகாண்டீபன், லட்சுமி லதா, எஸ்.ஐ.,க்கள்ஜெயக்குமார், சங்கர் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர். திருமங்கலம் நகர் உசிலம்பட்டி ரோடு, தெற்கு தெரு, சந்தைப்பேட்டை, மறவன்குளம், கப்பலுார், திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், புறநகர் பகுதிகளில் மேலக்கோட்டை, கிழவனேரி, ஆலம்பட்டி, நடுவகோட்டை பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.கள்ளிக்குடி, சிந்துபட்டி, கூடக்கோவில் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளிலும் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது சிலைகள் 5 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சிலை பாதுகாப்பில் விழா கமிட்டி சார்பில் ஒருவரை நியமித்து அவர் பொறுப்பேற்க வேண்டும். ஊர்வலத்தில் பங்கேற்கும் வாகனங்களில் அதிகளவில் கூட்டம் ஏறி வரக்கூடாது. காவல்துறை அமைத்துக் கொடுத்த பாதையில் தான் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க வேண்டும். சிலைகள் ஊர்வலமாக வந்து திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் உள்ள செங்குளம் கண்மாயில் கரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ