| ADDED : மே 24, 2024 02:52 AM
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று அரசுப் பொருட்காட்சி துவங்கியது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் தமிழ்செல்வராஜன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன் பங்கேற்றனர்.கண்காட்சி 45 நாட்கள் நடைபெறும். இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகள் உள்ளன.மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களின் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10. கண்காட்சி தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடைபெறும்.