உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / படிப்பிடை பயிற்சி தொடக்க விழா

படிப்பிடை பயிற்சி தொடக்க விழா

மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் மதுரைக்கல்லுாரி மற்றும் மீனாட்சி அரசினர் கல்லுாரி மாணவர்களுக்கான விடுமுறை கால படிப்பிடைப் பயிற்சி தொடங்கியது.மதுரைக் கல்லுாரி மாணவர் சமயராஜ் வரவேற்றார். மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் காந்திய சிந்தனை எனும் தலைப்பில் எத்தியோப்பியா ஒலைத்தா சோடோ பல்கலை ஊரகவியல் துறை பேராசிரியர் சேனாபதி பேசுகையில்,'' எத்தியோப்பியா தலைநகரான அடிஸ் அபாபாவில் முதன்மை சாலைக்கு மகாத்மா காந்தி சாலை என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் மகப்பேறு மருத்துவமனையும் உள்ளது'' என்றார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், இணைப் பேராசிரியை விமலா கலந்து கொண்டனர். மாணவி ரேணுகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ