உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குரு பூர்ணிமா வியாச பூஜை

குரு பூர்ணிமா வியாச பூஜை

மதுரை: மதுரை சி.எம்.ஆர்., ரோட்டில் உள்ள ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாடசாலையில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு வியாச பூஜை நடந்தது. ஆசிரியர் ராமாச்சாரி தலைமை வகித்தார்.ஸ்ரீமந் நாயகி ஆன்மிக எழுச்சி இயக்கத் தலைவர் பிரகாஷ் குமார் திம்மா 'வியாசர் மகிமை' என்ற தலைப்பில் பேசுகையில், 'நான்கு வேதங்களை தொகுத்தவரும், மகாபாரதத்தை எழுதியவரும், ஸ்ரீமத் பாகவதம் உட்பட 18 புராணங்களையும், பிரம்ம சூத்திரத்தையும் அருளிய வியாசருக்கு குரு பூர்ணிமா நாளில் பூஜை செய்வது நம்முடைய குருமார்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமையும்' என்றார்.பாடசாலை வித்யார்த்திகள் சாந்தி மந்திரம் பாராயணம் செய்தனர். பங்கேற்றோருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ