உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலகின் பாதி கொள்ளை அலைபேசியில்தான்... கருத்தரங்கில் திடுக் தகவல்

உலகின் பாதி கொள்ளை அலைபேசியில்தான்... கருத்தரங்கில் திடுக் தகவல்

மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் சைபர் கிரைம் குறித்த கருத்தரங்கு நடந்தது.ஏ.டி.எஸ்.பி., ஷாஜிதா பேசியதாவது: ஏழு ஆண்டுகளாக சைபர் கிரைம் தொடர்பான வழக்குகளை பார்த்துக்கொண்டு வருகிறேன். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகில் உள்ள பாதி கொள்ளை நம் அலைபேசியில் தான் நடக்கிறது. முன்பின் தெரியாதவர்களிடம் தகவல்களை பரிமாறி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறோம். இதுவரை 39 வழக்குகள் இவ்வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேட்ரிமோனியில் படங்களை பகிர்ந்து பின் அதை ஆபாசமாக எடிட் செய்து மிரட்டி அதிலிருந்து கொள்ளையடிப்பதும் ஒரு வகை சைபர் கிரைம் தான். எங்கள் குழு இந்தியாவிலேயே முதல் முறையாக லோன் ஆப் மூலம் கொள்ளையடிப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தோம் என்றார். தலைமை நுாலகர் தினேஷ் குமார் நினைவு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ