உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயறு விதைகளை கடினப்படுத்துங்கள்

பயறு விதைகளை கடினப்படுத்துங்கள்

மதுரை: ''கோடை பருவத்தில் குறுகிய கால பயறு வகைகளில் விதைகளை கடினப்படுத்தினால் வறட்சியைத் தாங்கி வளரும்'' என, வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியது:ஒரு லிட்டர் தண்ணீரில்100 மி.கி., ஜிங்க் சல்பேட் உப்பை கலந்து 350 மில்லி கரைசலை தனியாகஎடுக்க வேண்டும். அதில் ஒரு கிலோ அளவுக்கு உளுந்து அல்லது துவரை பயறு விதைகளை 3 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மி.கி., மாங்கனீஸ் சல்பேட் உப்பை கலந்து 350 மில்லி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கிலோ பாசிப்பயறு விதைகளை 3 மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி