உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கருத்தடைக்கு பின் குழந்தை: பெண்ணிற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

கருத்தடைக்கு பின் குழந்தை: பெண்ணிற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கருத்தடை கிகிச்சை தோல்வியடைந்ததால் குழந்தை பிறந்த பெண்ணிற்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனு:எனக்கு 2012 ல் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மீண்டும் கர்ப்பமாகி 2013ல் குழந்தை பிறந்தது. எனக்கு இழப்பீடு வழங்குமாறு குடும்பநலத்துறை துணை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சி.சரவணன்: மனுதாரர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர். அவருக்கு கருத்தடை செய்ததை உறுதிப்படுத்தும் சான்று சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது. பின் மனுதாரருக்கு குழந்தை பிறந்துள்ளது. கருத்தடை சிகிச்சை தோல்வியடைந்து, குழந்தையை பெற்றெடுக்கும் நபர் ரூ.30 ஆயிரம் இழப்பீடு பெற தகுதியுடையவர் என தமிழக சுகாதாரத்துறை 2013 மே 30 ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி மனுதாரருக்கு ரூ.30 ஆயிரத்தை குடும்பநலத்துறை துணை இயக்குனர் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ