உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெட்டிக் கடைகள் எத்தனை உயர்நீதிமன்றம் கேள்வி

பெட்டிக் கடைகள் எத்தனை உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை : மதுரை தல்லாகுளம் செந்தாமரை செல்வி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மாற்றுத்திறனாளியான நான் மேலுார் ரோட்டில் ஒரு மருத்துவமனை அருகே பெட்டிக் கடை நடத்துகிறேன். இதற்கு அனுமதி கோரி மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் விண்ணப்பித்தேன். நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மதுரை-மேலுார் ரோட்டில் குறிப்பாக மாவட்ட நீதிமன்றம் முதல் விவசாயக் கல்லுாரிவரை எத்தனை பெட்டிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன குறித்து நெடுஞ்சாலைத்துறை மதுரை கண்காணிப்புப் பொறியாளர் செப்.23 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நிராகரித்த உத்தரவிற்கு ஏற்கனவே பிறப்பித்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ