உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுகளை எரிப்பதால் பாதிப்பு

கழிவுகளை எரிப்பதால் பாதிப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் வி.பி. சிந்தன் நகர் ரோட்டோரம் வைக்கப்பட்டுள்ள குப்பை பெட்டிகள் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது. ஊராட்சி பணியாளர்களே குப்பையை எரிக்கின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் அருகில் குடியிருப்போருக்கு மூச்சுத் திணறல் பிரச்னைகளும் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக தெரிவித்தும் பலன் இல்லை. பிளாஸ்டிக் குப்பை எரிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ