உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 7 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வு சிறப்பு ஒதுக்கீட்டில் கிடைத்தது

மதுரையில் 7 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வு சிறப்பு ஒதுக்கீட்டில் கிடைத்தது

மதுரை: மதுரையில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் அரசு பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்கள் தங்களுக்கான கல்லுாரிகளை தேர்வு செய்தனர்.மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த தமிழ் வழியில் படித்த 532 பேர் 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதியதில் 162 பேர் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பெற்றனர். சிறப்பு கலந்தாய்வில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி வர்ஷினி மதுரை மருத்துவக் கல்லுாரி, திருநெல்வேலி பாப்பாபட்டி அரசு மாடல் பள்ளி மாணவர் அரசு, சூலப்புரம் அரசு பள்ளி மாணவி காயத்ரி தேவி கோவை, சுப்புலாபுரம் அரசு பள்ளி மாணவி கலைச்செல்வி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரிகளை தேர்வு செய்தனர். இவர்கள் தவிர தருண்ராஜ், அங்காளஈஸ்வரி ஆகியோர் பல் மருத்துவ படிப்புகளை தேர்வு செய்தனர்.சி.இ.ஓ., கார்த்திகா கூறுகையில், இவர்கள் 6 பேர் தவிர மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற பாண்டியராஜபுரம் மாநகராட்சி பள்ளி மாணவி ரக் ஷணாவிற்கு பொது கலந்தாய்வில் மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்காக உழைத்த ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுக்கள் என்றார்.'நீட்' ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தேவி, ஆசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், மோசஸ் பாக்கியராஜ், மணிகண்டன், ஞானகுரு, மெர்லின், ஜெசிந்தா ஆகியோரும் மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி