உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாடிப்பட்டியில் சூறாவளிக்கு தலைசாய்ந்த நெற்கதிர்கள்

வாடிப்பட்டியில் சூறாவளிக்கு தலைசாய்ந்த நெற்கதிர்கள்

மதுரை: வாடிபட்டியில் நேற்று வீசிய சூறாவளியுடன் கூடிய கனமழையால் தனிச்சியம் செம்புகுடிபட்டி விவசாயி முருகனின் 4 ஏக்கர் நெற்கதிர்கள் தலை சாய்ந்தன.அவர் கூறியதாவது: நான்கு ஏக்கரில் கோ 51 சன்ன ரக நெல்லை கிணற்று பாசன முறையில் கோடை சாகுபடி செய்திருந்தேன். அறுவடைக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் நெற்கதிர்கள் தலை சாய்ந்தன. மேலும் வயலுக்கு அருகே கரும்பு வெல்லம் காய்ச்சுவதற்காக அமைத்திருந்த தகர குடிலும் காற்றில் துாக்கி வீசப்பட்டு பொருட்கள் சேதமடைந்தன.நெற்கதிர்கள் முற்றுவதற்கு இன்னும் 15 நாளாகும். இன்னும் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. ஆனால் நெற்கதிர்கள் தலை சாய்ந்து இருப்பதால் தண்ணீர் பாய்ச்சும் போது கதிர்நுனி தண்ணீரில் பட்டு அழுகிவிடும். இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. விதைத்து நுாறு நாட்கள் காத்திருந்த நிலையில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. நான்கு ஏக்கர் நெற்கதிர்களை காப்பாற்ற வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அரசு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை