| ADDED : மே 03, 2024 05:49 AM
மதுரை: சேது பொறியியல் கல்லுாரியில் 17 வயது, அதற்கு கீழே உள்ள வீரர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி நேற்று துவங்கியது.இக்கல்லுாரி, சிவகாசி செஸ் கழகம் இணைந்து போட்டியை நடத்துகின்றன. நிறுவனர் முகமது ஜலீல் துவக்கி வைத்தார். முதன்மை நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா, முதல்வர் சிவக்குமார், தமிழக செஸ் போட்டி இணைச் செயலாளர் பிரகதீஷ், சிவகாசி செஸ் கழக செயலாளர் ஆனந்த ராமன், ஆர்பிட்டர் தினகரன் முன்னிலை வகித்தனர்.ஆண்கள் பிரிவில் 224 பேர், மகளிர் பிரிவில் 96 பேர் கலந்து கொண்டனர். ஒன்பது சுற்றுகளாக போட்டிகள் நடைபெறும். சுற்றுகளில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் ஆடவர், மகளிர் பிரிவில் தலா 10 பேருக்கு ரூ.ஒரு லட்சம் வரையான பரிசும் 11 வயது, 13 வயதின் கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது.ஏற்பாட்டை மின்னணுவியல் மற்றும் தொடர்புத்துறை பேராசிரியர் ஷேக் தாவூத், சிறப்பு அதிகாரி துரைராஜ், பேராசிரியர்கள் சாகுல் ஹமீது, நாகராஜ், சிவபாரதி, ஷேக் மைதீன், மலைச்சாமி, பி.ஆர்.ஓ. லட்சுமணராஜ் செய்தனர்.