உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ஜமாபந்தி இன்று துவக்கம்

மதுரையில் ஜமாபந்தி இன்று துவக்கம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்குமான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) இன்று (ஜூன் 12) முதல் ஜூன் 25 வரை நடக்க உள்ளது.மதுரை வடக்கு தாலுகாவில் கலெக்டர் சங்கீதா தலைமையிலும், பேரையூரில் டி.ஆர்.ஓ., சக்திவேல், மதுரை மேற்கில் ஆர்.டி.ஓ., ஷாலினி, உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், மதுரை கிழக்கில் மேலுார் ஆர்.டி.ஓ., ஜெயந்தி, திருமங்கலத்தில் ஆர்.டி.ஓ., சாந்தி, கள்ளிக்குடியில் டி.எஸ்.ஓ., ரவிக்குமார், திருப்பரங்குன்றத்தில் உதவி ஆணையர் (கலால்) சத்ய பாலகங்காதரன், மதுரை தெற்கில் சமூகநலத்திட்ட துணை கலெக்டர் சங்கீதா, வாடிப்பட்டியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) வித்யா, மேலுாரில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பஞ்சாபகேசன் தலைமையிலும் ஜமாபந்தி நடக்க உள்ளது.இந்நாட்களில் பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல் உட்பட குறைகளை மனுக்களாகக் கொடுத்து தீர்வு காணலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி