உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கராத்தே பெல்ட் போட்டித் தேர்வு

கராத்தே பெல்ட் போட்டித் தேர்வு

மதுரை : திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகடாமியில் மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி சார்பாக பெல்ட் போட்டி தேர்வு நடந்தது.மாணவர்கள் சாய்சரண், சமுத்ரா தேவி, ரூபேஷ் ஆகியோர் பிளாக் பெல்ட், பார்க்கவன், ஹரிஷ், பிரனேஷ் பிரவுன் மூன்றாம் நிலை பெல்ட் பெற்றனர். ஹரிஹரன், நகுல் சாய், டாம் குரூஸ் பிரபு, அர்ச்சனா ஆகியோர் பிரவுன் இரண்டாம் நிலை பெல்ட் பெற்றனர். திருக்குகா, ஸ்ரீ சபரி, அஸ்பிதா, சஞ்சீவ் குமார், கவுதம் ஆகியோர் பிரவுன் பெல்ட் பெற்றனர்.சம்யுக்தா, மகிமா, தாரிகா, திலக்தரன், வீரகஜன், சாய் பிரகாஷ், முகமத் தாஜுதீன், அதாவுல்லா இப்ராஹிம் ஆகியோர் ப்ளூ பெல்ட் இரண்டாம் நிலை பெற்றனர். சுதர்சன், ஹர்ஷிதா, ரிஷான், ஹரிஹரன், சாய்ராம், பிரணவ், சமித்திரன் ஆகியோர் ப்ளூ பெல்ட் முதல் நிலை பெற்றனர். ரித்தீஷ், சுதீப், மோஹித் த்ரிஷால், மோஹித் குமார், சிவபாலன் ஆகியோர் கிரீன் பெல்ட் பெற்றனர். ஜஸ்மிதா, மித்ரன் சாய், சஞ்சீவ் குமரன், அஸ்வந்த், கனிஷ்கா ஸ்ரீ, தர்ஷித், கவி யாழினி, பிருந்தா ஸ்ரீ, ஓம் நாக கிருபாணி, அத்விக் ஆகியோர் மஞ்சள் நிற பெல்ட் பெற்றனர்.போட்டி தேர்வின் நடுவராக தலைமை பயிற்சியாளர் ராஜா செயல்பட்டார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித்தலைவர் வைரமணி, ஒருங்கிணைப்பாளர் டி. ராஜா சான்றிதழ் வழங்கினர். பயிற்சியாளர்கள் அஜய் கிருஷ்ணா, சக்தி ஸ்ரீ, திருனிதா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை