| ADDED : மே 28, 2024 03:36 AM
மதுரை : ''காவிரி விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகமும் சகோதரர்கள்-. எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்க்கப்படும்,'' என, மதுரையில் கர்நாடக உணவுத்துறை அமைச்சர் முனியப்பாதெரிவித்தார்.மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று குடும்பத்துடன் அவர் தரிசனம் செய்தார். கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடையுள்ள நிலையில், அவரை வரவேற்க வந்த காங்கிரசார் அலைபேசியுடன் செல்ல முயன்றதை போலீசார் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அனுமதிக்கப்பட்ட வாகனங்களைவிட கூடுதல் வாகனங்கள் சித்திரை வீதியில் வந்ததால் போலீசார் 'டென்ஷன்' ஆயினர்.பின் முனியப்பா கூறியதாவது: தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் 'இண்டியா' கூட்டணி வெற்றியடையும். இந்திய அரசியலில் இளம் தலைவராக ராகுல் உள்ளார். மக்கள் அவரைதான் விரும்புகிறார்கள். காவிரி விவகாரத்தில் எந்த பிரச்னையும் இல்லை. தமிழகமும், கர்நாடகமும் சகோதர்களாக உள்ளனர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்க்கப்படும் என்றார்.