உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கத்தரி சாகுபடி பேரையூரில் தீவிரம்

கத்தரி சாகுபடி பேரையூரில் தீவிரம்

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் விவசாயிகள் கத்திரிக்காய் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இப்பகுதியில் விவசாயிகள் பரவலாக காய்கறிகள் குறிப்பாக கத்தரிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் செடிகள் பசுமையாக வளர்ந்து அதிகளவில் காய்கள் பிடித்துள்ளது. இவற்றைப் பறித்து உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த செலவில் ஓரளவு வருமானம் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை