உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் 4 மணி நேரத்தில் மீட்பு

ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் 4 மணி நேரத்தில் மீட்பு

மதுரை:மதுரை, எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது கணவர் ராஜ்குமார், தனியார் வங்கி ஊழியராக இருந்தவர். இவர்களின், 15 வயது மகன், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை பால்பாண்டி என்பவரது ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். பைபாஸ் ரோடு வேல்முருகன் நகர் பகுதி அருகே ஆட்டோ சென்றபோது, ஆம்னி வேனில் காத்திருந்த சிலர், கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவருடன், மாணவனை ஆம்னி வேனில் கடத்தினர். கடத்தல்காரர்களில் ஒருவர் மைதிலிக்கு போன் செய்து, 'உன் மகனை கடத்தி இருக்கிறோம். மகனை விடுவிக்க, அரைமணி நேரத்தில், 2 கோடி ரூபாய் பணத்துடன் துவரிமான் நான்குவழிச்சாலை ரவுண்டானாவுக்கு வர வேண்டும்' என, மிரட்டினார். அதிர்ச்சியடைந்த மைதிலி, எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார், கடத்தல்காரர்கள் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருப்பது தெரிந்து நெருங்கிய போது, மாணவனையும், ஆட்டோ டிரைவரையும் இறக்கி விட்டு, கடத்தல் காரர்கள் தப்பினர். புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் மாணவனை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். மைதிலியும், கணவர் ராஜ்குமாரும் அதிக கடன் வாங்கியிருந்தனர். கடன் தொல்லை காரணமாக ஆறு மாதங்களுக்கு முன் ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடன் கொடுத்தவர்கள் மாணவனை கடத்தியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, கடத்தல் கும்பலில் சிலரை போலீசார் பிடித்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை