உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை கிருஷ்ணர் வேடப்போட்டி

நாளை கிருஷ்ணர் வேடப்போட்டி

மதுரை: மதுரை அனுஷத்தின் அனுக்கிரம் அமைப்பின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஆக.,25) காலை 10:00 மணிக்கு எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டில் உள்ள ஸ்ரீமஹா பெரியவா கோயிலில் எல்.கே.ஜி., முதல் 2ம் வகுப்பு வரையான பள்ளிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மாறுவேடப் போட்டி நடக்கிறது.ஒரு பள்ளியில் இருந்து எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அனைவருக்கும் பரிசு உண்டு. பெற்றோர் தங்கள் வீட்டில் இருந்தே கிருஷ்ணர் வேடமிட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்து வரவேண்டும் என அமைப்பாளர் நெல்லை பாலு தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 94426 30815.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ