உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில்களில் கும்பாபிஷேகம்..

கோயில்களில் கும்பாபிஷேகம்..

சோழவந்தான்; மன்னாடிமங்கலம் கல்லாங்காடு தெரு முத்தையா சுவாமி, மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 22 முதற்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது.வரதராஜ பண்டிட் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.சுவாமி, அம்மன், ஊர்க்காவலன் சுவாமி, 21 பந்தி தெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பா.ஜ., விவசாய அணி மாநில துணைத் தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், லயன்ஸ் சங்க தலைவர் மருதுபாண்டியன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கொட்டாம்பட்டி

சாலைக்கிபட்டி பெரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 21 யாகசாலை பூஜை துவங்கியது.இதே போல் கம்பூர், வள்ளி தெய்வானை மற்றும் அருவி மாமரத்தான் ஆண்டிகோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 22 யாகசாலை பூஜை துவங்கியது. நான்கு மற்றும் இரண்டாக யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார்கள் கும்பத்தின் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சாலைக்கிபட்டி, கம்பூர் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !