உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மத்திய அரசின் புதிய திட்டங்கள் துவக்கம்

மத்திய அரசின் புதிய திட்டங்கள் துவக்கம்

மதுரை : மதுரையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் திறன் வளர்ச்சி மறுவாழ்வு மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மையத்தில், பிரதம மந்திரி செயல்திறன் பயனாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்கள் துவக்க விழா நடந்தது.மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா துவக்கி வைத்தார். சென்னை ஊனமுற்றோரின் மேம்பாட்டு தேசிய நிறுவன இயக்குநர் நச்சிகேத்தா ராவுத், மதுரை மைய (சி.ஆர்.சி.,) பொறுப்பாளர்கள் கதிரவன், கார்த்தி சீனிவாசன் பங்கேற்றனர்.மைய பொறுப்பாளர்கள் கூறுகையில், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் மூன்று மாதங்களுக்குமுன் புதிதாக துவங்கிய இம்மையத்தில் புதிய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு இயன்முறை, செயல்முறை சிகிச்சைகள், பேச்சுப் பயிற்சி, சிறப்பு கல்வி, தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை