உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் திட்டமிட்டபடி நடக்கும்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் திட்டமிட்டபடி நடக்கும்

மதுரை : 'மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் அரசியல் உள்நோக்கம் இல்லை ; திட்டமிட்டபடியே கட்டுமான பணிகள் நடக்கிறது,' என, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.மதுரை அருகே தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2024 மே 21ல் எல் அண்ட் டி நிறுவனம் மூலம் கட்டுமான பணி துவங்கியது. முதற்கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, விடுதி உள்ளிட்டவை 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும், மொத்த கட்டுமானமும் 33 மாதங்களில் முடிக்கப்படும் எனவும் எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.ஆனால் கட்டுமான பணி தாமதமானதால் 2021 - -22 கல்வியாண்டு முதல் தற்போது வரை ஆண்டுக்கு 50 பேர் வீதம் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக பயில்கின்றனர்.இடப்பற்றாக்குறையால் திருமங்கலம் அருகே வாடகை கல்லூரி வளாகம் கேட்டு கடந்த ஜனவரியில் எய்ம்ஸ் நிர்வாகம் விளம்பரம் வெளியிட்டது. சமீபத்தில் விடுதிக்கும் வாடகை கட்டடம் கேட்டு அறிவிப்பு வெளியிட்டது. ஓராண்டுக்கு ஒப்பந்தம் எனவும் தேவைப்பட்டால் மேலும் நீட்டித்துக் கொள்ளப்படும் எனவும் அதில் அறிவித்திருந்தது.இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவமனை கட்டுமான பணிகள் மீண்டும் தாமதமாகும் என்ற சந்தேகம் மாணவர்களிடம் எழுந்தது.இது குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கல்வியை தொடர்வதில் மாணவர்கள் முழு திருப்தியுடன் உள்ளனர். மாணவர்களுக்கு அதிருப்தி இருப்பதாக வெளியான செய்தி தவறு. திட்டமிட்டபடி கட்டுமான பணிகள் இடையூறின்றி நடக்கிறது,' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
ஜூலை 03, 2024 12:47

தமிழக பாஜக இந்த AIIMS மேட்டருக்காக ஒரு காரியதரிசியை நியமித்து அதன் கட்டுமான பணிகள் எவ்வாறு நடக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், ஏதாவது இடையூறுகள் வந்தால் அதை உடனே மத்திய அரசுக்கு தெரிவித்து ஆவண நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக செயல்படலாமே? இதில் தொடர்ந்து காலதாமதமானால், அரசுக்குத்தான் அவப்பெயர். தேர்தல் நேரத்தில் அதற்க்கான விளக்கங்கள் கொடுப்பதற்கு பதிலாக, விரைவில் பணிகள் முடிவதற்கு என்ன செய்யவேண்டுமோ அவற்றை செய்தால், மாணவர்களுக்கும் பயனாளிகளுக்கு நல்லதுதானே?


Sampath Kumar
ஜூலை 03, 2024 12:01

இதை விட ஒரு கேவலம் தமிழ் நாட்டுக்கு உண்ட பிஜேபி அரசு ஏத்தநி வஞ்சக அரசு என்பதை தமிழ் நட்டு மக்கள் இப்போ தெளிவாக புரிந்து விட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை