உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை காமராஜ் பல்கலைகன்வீனர் கமிட்டி தேர்வு

மதுரை காமராஜ் பல்கலைகன்வீனர் கமிட்டி தேர்வு

மதுரை, ; மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் கல்லுாரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையிலான கன்வீனர் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.இப்பல்கலை துணைவேந்தராக இருந்த குமார் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்தார். இதையடுத்து பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் கமிட்டியை தேர்வு செய்ய உயர்கல்விச் செயலர் கார்த்திக் தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.செயலர் கார்த்திக், உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, வாசுதேவன், தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் வீடியோகான்பரன்ஸ் மூலமும், உறுப்பினர்கள் புஷ்பராஜ், சண்முகவேல், தர்மராஜ், மயில்வாகனன், கண்ணன், பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் ஆகியோர் பல்கலை சிண்டிகேட் அறையில் இருந்தும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.கமிட்டி ஒருங்கிணைப்பாளராக கார்மேகம், உறுப்பினர்களாக வாசுதேவன் (கவர்னர் பிரதிநிதி), தவமணி கிறிஸ்டோபர் (கல்வி பேரவை பிரதிநிதி), மயில்வாகனன் (பல்கலை பேராசிரியர்கள் பிரதிநிதி) ஆகியோர் கொண்ட குழுவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின்னரே இக்குழு செயல்பாட்டுக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி