உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி: வேலியே பயிரை மேயலாமா என பக்தர்கள் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி: வேலியே பயிரை மேயலாமா என பக்தர்கள் கேள்வி

மதுரை : மதுரை, எல்லீஸ் நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு, அ.தி.மு.க., ஆட்சியில், மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் கட்டப்பட்டது. இதற்கு முன், இந்த அலுவலகம் தெற்கு - மேற்கு சித்திரை வீதி சந்திப்பில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்தது. இட பற்றாக்குறையால், 2017 ஆக., 6ல் காலி செய்யப்பட்டது. காலி செய்த போது, வாடகை பாக்கி செலுத்தவில்லை. அறநிலையத்துறையின் கீழ், மீனாட்சி கோவில் நிர்வாகம் இயங்குவதால், அதிகாரிகளும் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.இதற்கிடையே, தற்போதைய மண்டல அலுவலகம், 2017 முதல் எல்லீஸ் நகரில் இயங்கி வருகிறது. இதன் வாடகை விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தினகரன் என்பவர் கோவில் நிர்வாகத்திடம் கேட்டார். அதற்கு, 59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.பக்தர்கள் கூறியதாவது:கோவில் இடத்தில் கடை வைத்திருப்போர், குடியிருப்போரிடம் வாடகை வசூலிப்பதில் 'கறார்' காட்டும் அறநிலையத்துறை அதிகாரிகள், தங்களது அலுவலகத்திற்கான வாடகையை தராமல் இழுத்தடிப்பது நியாயம் தானா?இது, வேலியே பயிரை மேய்வது போல உள்ளது. இதனால், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதே இடத்தை தனியாருக்கு கொடுத்திருந்தால், வாடகை முறையாக வந்திருக்கும். வாடகையையும் உயர்த்தி இருக்கலாம். அறநிலையத்துறை அலுவலகம் என்பதால், கோவில் நிர்வாகம் கேட்க தயங்குகிறது. இவ்வாறு கூறினர்.

பெயின்ட் கோலத்தால் அதிருப்தி

கோவிலுக்குள் பொற்றாமரை குளத்தை சுற்றியும், குறிப்பிட்ட இடங்களில், திருவிழா காலங்களில் அரிசி மாவு, சுண்ணாம்பு கோலமிடுவது வழக்கம். ஆனால், தற்போது பெயின்டால் கோலமிட்டு வருவது, பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் கூறுகையில், 'கோவில் பூஜை, நடைமுறைகள் எல்லாவற்றிலும் ஐதீகம் பார்ப்பதும், மரபு கடைப்பிடிப்பதும் வழக்கம். தற்போது, பெயின்ட் கோலத்தால் கற்களின் ஈரத்தன்மை பாதித்து, வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. துாண்கள் அனைத்தும் தரைதளத்துடன் இணைந்துள்ளதால், காலப்போக்கில் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும். இதை தவிர்க்க பழங்கால முறைப்படி, மாவு கோலமிட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை