| ADDED : மே 29, 2024 05:18 AM
மதுரையில் திறமையான மாணவர்களை உருவாக்கும் பணியில் கோவில்பாப்பாகுடி மஹரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி சிறப்பாக செயல்படுகிறது.கல்விப் பணியை நோக்கமாக கொண்டு 2012ல் மதுரையில் சிறிய அளவில் துவங்கப்பட்ட இப்பள்ளி தற்போது பெரும் கல்விக் குழுமமாக வளர்ச்சியடைந்துள்ளது. கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் சகோதயா பள்ளி ஒன்றியக் குழுமம் நடத்தும் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று வென்று வருகின்றனர். கலாசாரத்தை எடுத்துக்கூறும் வகையில் விழாக்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.மதுரை நகரில் ஜெ.இ.இ., நீட் நுழைவு தேர்வுகளில் மாணவர்களை வெற்றி பெறச் செய்து ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,யில் அதிக எண்ணிக்கையில் இப்பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ள பெருமையை கொண்டுள்ளது. மாணவர்களுக்கு கூடுதல் திறன்களை வளர்க்கும் வகையில் சிலம்பம், நடனம், ஓவியம், பாடல், யோகக்கலை, தற்காப்பு பயிற்சிகளை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்படுகிறது.இந்தாண்டு சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் மதுரையில் முதல் மதிப்பெண் பெற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்ற பள்ளியாக இது உள்ளது. மாணவர்களால் மாணவர்களுக்கான பள்ளியாக இது விளங்குகிறது. தொடர்புக்கு 77080 66567.-எம்.எஸ்.வடிவேல் சேர்மன் மஹரிஷி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி கோவில்பாப்பாகுடி மதுரை