உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுாரில் கன்னி நாய் திருவிழா

மேலுாரில் கன்னி நாய் திருவிழா

மேலுார்: ஆமூரில் கன்னித் தமிழனின் பெருமை அமைப்பு சார்பில் கன்னி இன நாட்டு நாய்கள் திருவிழா நடந்தது.சென்னை, திருநெல்வேலி, ராஜபாளையம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட கன்னி பொட்டு, பிள்ளை, செவலை என 13 வகையான கன்னி நாய்கள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட கன்னி நாயின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.அமைப்பாளர் பிரபு கூறியதாவது: கன்னி நாய்கள் பாதுகாப்பு, மற்றும் வேட்டைக்குரியவை. வெளிநாட்டு நாய்களின் வருகையால் நம் நாட்டு இன நாய்கள் அழிவதை தடுக்கவும், இந் நாய்களை வளர்ப்பதால் வீடுகளில் நடக்கும் குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் திருவிழா நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ