உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலை வழக்கில் சிக்கியவர் தற்கொலை

கொலை வழக்கில் சிக்கியவர் தற்கொலை

திருமங்கலம்: மதுரை ஆஸ்டின்பட்டி தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் 2023ல் நடந்த கட்டுமான பணியில் பீகாரைச் சேர்ந்த சுபேஷ்குமார் 18, சன்னி 21, பணியாற்றினர். நவ.29 இரவில் கூத்தியார்குண்டு அருகே அவர்களை வழிமறித்த இருவர் கத்தியால் குத்தி அலைபேசியை பறித்து தப்பினர். இதில் சுபேஷ்குமார் இறந்தார். இவ்வழக்கில் மறவன்குளம் சந்தோஷ்குமாரை 20, போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்தவர் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்தார். இவர் மீது கொலை வழக்கு இருப்பதை அறிந்து வேலையில் இருந்து நிறுத்தினர். சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு, கொலை வழக்கு தொடர்பாக சம்மன் வந்தது. விரக்தி அடைந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி