உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலமேட்டில் மா சீசன் துவக்கம்

பாலமேட்டில் மா சீசன் துவக்கம்

பாலமேடு: பாலமேட்டில் மா சீசனை முன்னிட்டு மார்க்கெட்டிற்கு பாலாமணி, கல்லாமை ரக மாங்காய்களை பறிக்கும் பணி துவங்கியுள்ளது.பாலமேடு வட்டார பகுதிகளில் அதிக அளவில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன. சென்ற தை மாதமே மரங்களில் பூக்கள் காணப்பட்டன. இதனை தொடர்ந்து பல விவசாயிகளும் மசூலுக்காக மருந்து அடிக்காமலும், ஏற்கனவே மருந்து அடித்த குத்தகைதாரர்கள் மழையை எதிர்பார்த்தும் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மாம் பூக்கள் உதிர்ந்தாலும், காய்ப்புக்கு மழை உதவும் என விவசாயிகள் தெரிவித்தனர்.சரந்தாங்கி அஜய் என்பவர் கூறுகையில், ''மா சீசனை முன்னிட்டு முன்னதாகவே காய்க்க துவங்கும் பாலாமணி, கல்லாமை ரக மாங்காய்களை பறித்து மதுரை, முடுவார்பட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கிறோம். கடந்தாண்டுகளில் ஆரம்பத்தில் கிலோ ரூ.80 முதல் 90 வரை விலை போனது. தற்போது கிலோவுக்கு ரூ.50 தான் கிடைக்கிறது. வரத்து அதிகரித்தால் இன்னும் விலை குறையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !