உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தா.பாண்டியனுக்கு மணிமண்டபம்: தடை கோரிய வழக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு

தா.பாண்டியனுக்கு மணிமண்டபம்: தடை கோரிய வழக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: இந்திய கம்யூ.,முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த தா.பாண்டியனுக்கு உசிலம்பட்டி அருகே மணிமண்டபம் அமைக்க தடை கோரிய வழக்கில், 'தற்போது கட்டுமானம் மேற்கொள்ளவில்லை. சட்டத்திற்கு புறம்பாக மேற்கொண்டால் நீதிமன்றத்தை நாடலாம்' என உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை பைசல் செய்தது.உத்தப்பநாயக்கனுார் பிரேம்சந்தர் தாக்கல் செய்த மனு: அய்யன்கோவில்பட்டியில் எனது தந்தை ராஜனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. நிலத்தின் உரிமை தொடர்பாக ராஜன், அவரது சகோதரர் தா.பாண்டியன் இடையே பிரச்னை இருந்தது. ராஜன் 2011ல் இறந்தார். நான் எனது சகோதரர்கள்,தாய் மதுரை மூன்றாவதுசார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். வழக்கு முடிவுக்கு வரும்வரை தடை விதித்தது. அவ்வழக்கு மாவட்ட சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது. பாண்டியன் 2021 பிப்.,26ல் இறந்தார்.இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2024 பிப்.,26 ல் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்ட வந்ததாக கூறினர். கற்களை வைத்து அதில் கட்சி கொடியை நிறுத்திச் சென்றனர். மணிமண்டபம் அமைக்க அனுமதிக்க வேண்டாம் என தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துத்துறை செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.மார்ச் 15ல் தனி நீதிபதி,'மணிமண்டபம் அமைக்க அனுமதி கோரினால் வருவாய்த்துறை அனுமதியளிக்கக்கூடாது. இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது'என உத்தரவிட்டார். மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். தா.பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹர்,'இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதி: தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுஉள்ளது. கட்டுமானம் மேற்கொள்ள வேண்டுமெனில் உரிய அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். சிலை அமைக்க அனுமதி தேவையில்லை. சட்டத்திற்கு புறம்பாக கட்டுமானம் மேற்கொண்டால் மீண்டும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம். சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எதிராக தடை கோரி கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம். இடைக்காலத் தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை