சேக்கிபட்டியில் மஞ்சுவிரட்டு
மேலுார் : சேக்கிபட்டி முத்தாளம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. சேக்கிபட்டி, கம்பூர் பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கியதில் ஐவருக்கு காயம் ஏற்பட்டது.