உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை நகர் வைகையில் மருத்துவக் கழிவு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை நகர் வைகையில் மருத்துவக் கழிவு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை கோரியதில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.வைகை நதி மக்கள் இயக்கம் நிறுவனர் நாகராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை அரசு மருத்துவமனையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. போதிய மின்வசதி இல்லாததால் செயல்படவில்லை. கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் கலக்கின்றன. ஏற்கனவே வைகை ஆறு மாசுபட்டுள்ளது.அதன் நீரை ஆய்வு செய்ததில் ரசாயனம் கலந்துள்ளது. காரத் தன்மையால் நீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என உறுதியாகியுள்ளது. ஆழ்வார்புரம் அருகே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படவில்லை. அது கோரிப்பாளையம் மேம்பால பணிக்காக அகற்றப்பட உள்ளது. இதனால் வைகைக்கு கழிவுநீர் வரத்து அதிகரிக்கும்.அரசு மருத்துவமனையிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வைகையில் கலப்பதை தடுக்க நடவடிக்கை கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர், மருத்துவமனை டீனுக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூன் முதல் வாரம் ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ