உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையின் பாரம்பரியத்திற்கு பாதிப்பின்றி மெட்ரோ ரயில் பணிகள்: மேலாண் இயக்குனர் தகவல்

மதுரையின் பாரம்பரியத்திற்கு பாதிப்பின்றி மெட்ரோ ரயில் பணிகள்: மேலாண் இயக்குனர் தகவல்

மதுரை : ''மதுரையின் பாரம்பரியத்திற்கு பாதிப்பின்றி மெட்ரோ ரயில் பணிகள் பாதுகாப்பாக நடக்க உள்ளது'' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறினார்.அவரது தலைமையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமைப் பொதுமேலாளர்கள் ரேகா, லிவிங்ஸ்டன் எலியேசர், மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, டி.ஆர்.ஓ., ராகவேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவி பங்கேற்றனர்.பின்னர் சித்திக் கூறியதாவது: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில், 26 ஸ்டேஷன்களுடன் 32 கி.மீ., அமைக்க, ரூ.11 ஆயிரத்து 368 கோடி மதிப்பிலான அறிக்கை, மாநில அரசின் பரிந்துரைப்படி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டமாக நிலஆர்ஜிதம் செய்யும் பணிகள், மின்சார, தண்ணீர் குழாய்கள் இணைப்பு போன்ற தேவையான திட்டப்பணிகளை முன்னெடுக்க சென்னையில் இருந்து வந்துள்ளோம்.மெட்ரோ ரயில் பணிகள் வழக்கமான நடைமுறைப்படியே நடக்கிறது. இதில் தாமதம் எதுவும் இல்லை. இத்திட்டம் மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம், நிடிஆயோக் உட்பட பல துறைகளிலும் ஒப்புதலுக்கு பின்பே தொடங்கப்படும். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் 5.5 கி.மீ.,க்கு அண்டர் கிரவுண்டிலும்(பூமிக்கு அடியில்), மீதி 26.5 கி.மீ.,க்கு மேல்மட்ட பாலத்திலும் செல்லும் வகையில் உள்ளது. இதற்கான அண்டர் கிரவுண்ட் பணிகளுக்கு நான்கரை ஆண்டுகள், மேற்பரப்பு பணிகளுக்கு மூன்றரை ஆண்டுகள் தேவைப்படும். இதற்கான நில ஆர்ஜிதத்திற்கு அதிக காலம் ஆகும். ஏற்கனவே கோவையில் இப்பணிகள் துவங்கிவிட்டன. மதுரையிலும் இப்பணியை துவக்க உள்ளோம்.

பாதிப்பின்றி பணிகள்

மதுரை கலாசார, பாரம்பரிய மிக்க நகரம் என்பதால் அதற்கு பாதிப்பில்லாத வகையில் பணிகள் நடக்கும். மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 100 மீ.,க்கு அப்பால்தான் ஸ்டேஷன் அமைய உள்ளது. சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அண்டர் கிரவுண்ட் பணிகள் பாதுகாப்பாக நடைபெறும் என்பதால் பாதிப்பு வராது.மெட்ரோ பணிகளை 'சிங்கிள் புராஜெக்ட்'ஆக, மதுரை, கோவைக்கு பொதுவாக செயல்படுத்துவதால், உபகரணங்களை வாங்குவது முதல் சிக்னலிங் சிஸ்டம் வரை ஒரே மாதிரி இருக்கும் என்பதால் பணிகள் எளிதாக இருக்கும். மதுரை விரிவாக்கம் பெற்று வரும் நகரம் என்பதால், இப்பகுதி போக்குவரத்து, மக்கள் ஆலோசனை பரிந்துரைப்படி மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
பிப் 27, 2025 22:26

மத்திய பாஜக அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிப்பதற்கு முன்பே மெட்ரோ ரயில் திட்டம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விடும்.


ஜகதீஷ்
பிப் 26, 2025 18:55

அந்த அழுக்கும், வறுமையும் ,குப்பையும் மாறாம ரொம்ப ஒசரமா காட்டுங்க.


V SURESH
பிப் 26, 2025 10:03

எது எப்படியோ மெட்ரோ பணிகள் 2030 ம் ஆண்டுக்குள் முடிவடைந்த ஆல் சரி.


முக்கிய வீடியோ