உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சபாநாயகரை சமூகவலைதளத்தில் தாக்கும் அமைச்சர் ஆதரவாளர்கள்

சபாநாயகரை சமூகவலைதளத்தில் தாக்கும் அமைச்சர் ஆதரவாளர்கள்

நாகர்கோவில்: சட்டசபையில் அரசியல் மேடை போல பேசக்கூடாது என அறிவுரை கூறிய சபாநாயகர் அப்பாவுவை, அமைச்சர் மனோதங்கராஜ் ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் வறுத்து எடுக்கின்றனர்.சட்டசபையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் மனோ தங்கராஜ் பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு , வெளியில் மேடையில் பேசுவது போல் பேசுவது சபை நாகரீகம் இல்லை, சப்ஜெட்டுக்கு வாங்க, மூத்த அமைச்சர்கள் எல்லாம் பேச வேண்டியிருக்கிறது, நீங்க இன்னும் சப்ஜெக்ட்டை தாண்டவில்லை. அதை எல்லாம் மனதில் வைத்து பேசுங்கள், சபையில் பொய் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். என்ன பேசவேண்டும் என்ற சபை நாகரிகம் உள்ளது. தயவு செய்து அதை பயன்படுத்துங்கள்' என அறிவுரை கூறினார்.இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் ஆதரவாளர்கள் மனோ தங்கராஜ் ஒரு வரலாறு ' என்ற வாட்ஸ்ஆப் குழுவிலும், முகநுால் பக்கங்களிலும் சபாநாயகரை கடுமையாக தாக்கி எழுதியுள்ளனர்.அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் கடுமையான விமர்சனமாக உள்ளது.யாருக்கு யார் நாகரிகம் சொல்லிக்கொடுக்க வேண்டும் ...மனோ என்றும் மானுட போராளிக்கு நாகரிகம் சொல்லிக்கொடுக்க ஒரு தகுதி வேண்டும்....' என்று துவங்கி அவதுாறு வார்த்தைகளால் எழுதி விட்டு, சபாநாயகர் பற்றி சொல்வதாக நீங்கள் நினைத்தால் பொறுப்பல்ல' என்று இறுதியில் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சமூக வலைதள தாக்குதல் கண்டு தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை