உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடிப்படை வசதி இல்லாத நவீன எரிவாயு தகன மேடை

அடிப்படை வசதி இல்லாத நவீன எரிவாயு தகன மேடை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி பேரையூர் ரோட்டில் உள்ள மயானத்தில் 2019ல் நவீன எரிவாயு தகனமேடை அமைத்தனர். போதுமான இயந்திரங்கள், மின் இணைப்பு கிடைக்காமல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டனர். பின் 2022 ல், கூடுதல் அடிப்படை வசதிகள் செய்யாமல் செயல்பாட்டுக்கு வந்தது. மயானம் மட்டும் இருந்த பகுதியில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நுண்ணுாட்ட உரம் உற்பத்தி செய்வதற்கும், பிளாஸ்டிக் கழிவுகளை சேமிக்கவும் கட்டடங்கள் கட்டினர். தொடர்ந்து நகராட்சி குப்பையையும் இப்பகுதியில் கொட்டி வருகின்றனர். இதனால் மயானம் செயல்பட்ட பகுதி, குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளது. இறுதிச் சடங்குகளுக்கு தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளது. மயானத்திற்கு வருவோர் காரியங்கள் முடிந்தபின் அருகில் பேரையூர் ரோட்டில் கூட்டுக்குடிநீர் குழாய் மூலம் வெளியேறும் தண்ணீரில் குளித்துச் செல்கின்றனர். தியான மண்டபம் என அமைத்த அறையை சுத்தம் செய்யாமல் குப்பை போட்டு வைத்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் எரிவாயு தகன மேடை மயானத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்போருக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ