உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழா

திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா நேற்று நடந்தது.கோயிலில் மே 13ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய விசாகத் திருவிழாவில் தினமும் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்ஸவம் நடந்தது. நேற்று முன்தினம் பால்குட உற்ஸவம் நடந்தது.மொட்டையரசு திருவிழாவில் நேற்று காலை உற்ஸவர் சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து தங்கக் குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் அருள்பாலித்து, இரவு 11:00 மணிக்கு பூப்பல்லக்கில் கோயில் சென்றடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி