உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளைபொருட்களை பாதுகாக்க குளிர்பதன வசதியுடன் கோடவுன் மாட்டுத்தாவணியில் புதிய வளாகம்

விளைபொருட்களை பாதுகாக்க குளிர்பதன வசதியுடன் கோடவுன் மாட்டுத்தாவணியில் புதிய வளாகம்

மதுரை: விவசாயிகளின் விளைபொருட்களை குளிர்சாதன வசதியுடன் பாதுகாக்கும் வகையில் மாட்டுத்தாவணி அருகே சிட்கோ வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.வேளாண் வணிகத்துறை சார்பில் மாவட்டத்தில் 6 இடங்களில், டி.கல்லுப்பட்டி தவிர வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் சொந்த கட்டடத்தில் செயல்படுகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இங்கு தரம்பிரித்து மறைமுக ஏலத்திலும், தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) மூலமும் விற்று லாபம் பெறுகின்றனர்.மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் விவசாயிகள், வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில் 2000 டன், 1500 டன் சேமிப்பு கோடவுன்கள் செயல்படுகின்றன. உழவர் சந்தை, மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வியாபாரிகளும், விவசாயிகளும் கடைகள் மூலம் காய்கறி, பழம், பூக்களை விற்பனை செய்கின்றனர். விற்காத பொருட்களை பாதுகாக்க வசதி இல்லாததால் அவற்றை குப்பையில் கொட்டும் அவலம் நடக்கிறது.இதனைத் தவிர்க்க அருகே உள்ள சிட்கோ வளாகத்தில் ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் முருங்கை ஏற்றுமதி மண்டலமாக மதுரை மாவட்டத்தை தேர்வு செய்தபோது இந்தக் கட்டடம் கட்டப்பட்டு சில பயிற்சிகள் நடத்தப்பட்டன. மதுரை முருங்கை மண்டலத்தில் இருந்து மாற்றப்பட்டபின், இந்தக் கட்டடத்தை வேளாண் ஒழுங்குமுறை கூடத்தின் துணை விற்பனை நிலையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கனவே கட்டட பணி முடிந்து விவசாயிகளுக்கான இடுபொருள் கடைகள் 50 உள்ளன. வங்கி, கேன்டீன், பயிற்சி மையம், விவசாயிகள் மையம், விளைபொருட்களை தரம்பிரிப்பது, பேக்கிங் செய்யும் ஹால், 35 டன் பொருட்களை பாதுகாக்கும் குளிர்பதன வசதி, கழிப்பறை வசதிகளுடன் உள்ளன.விளைபொருட்களை இங்கு கொண்டு வந்து ஏலம் இடலாம். விவசாயிகள், வியாபாரிகள் பொருட்களை இக்கோடவுனில் குறைந்த வாடகைக்கு பாதுகாக்கலாம். மே இறுதியில் இக்கட்டடம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை