உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என யாரிடமும் யாசகம் கேட்கவில்லை: மதுரையில் பன்னீர்செல்வம் காட்டம்

எங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என யாரிடமும் யாசகம் கேட்கவில்லை: மதுரையில் பன்னீர்செல்வம் காட்டம்

மதுரை : எங்களை கட்சியில் இணைத்துக்கொள்ளுங்கள் என நானே, சசிகலாவோ யாரிடமும் யாசகம் கேட்கவில்லை; அ.தி.மு.க.,வை இணைப்பதற்கான பணிகள் நடக்கின்றன என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொள்ளுங்கள் என சசிகலா எப்போது, யாரிடம் தெரிவித்தார். அதுதொடர்பாக அவர் எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை. பிரிந்து கிடக்கின்ற அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். அதைத்தான் நான், சசிகலா உள்ளிட்டோர் வலியுறுத்துகிறோம்.எங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்று யாரிடத்திலும் சென்று யாசகம் கேட்கவில்லை. அ.தி.மு.க., வை இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் நடக்கும். தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் அ.தி.மு.க., வில் அந்த இணைப்பு உறுதியாக நடக்கும். சசிகலா மேற்கொண்டுள்ள முயற்சி நல்லது தான்.அவர் மக்களின் கருத்தை அறிய தனியாக பயணம் செய்கிறார். நான் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என அமைத்து போராடிக் கொண்டிருக்கின்றேன். இருவருடைய எண்ணம், இலக்கு ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை