உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமைப்புகளுக்கு அழைப்பு இல்லாதது இழிவுபடுத்தும் செயல்

அமைப்புகளுக்கு அழைப்பு இல்லாதது இழிவுபடுத்தும் செயல்

மதுரை : ''மது ஒழிப்பு மாநாட்டிற்கு அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறுவது அனைத்து அமைப்பினரையும் இழிவுபடுத்தும் செயல்,' என, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறினார்.மதுரையில் கருணாஸ் கூறியதாவது : பா.ஜ., வை எதிர்த்து அரசியல் செய்ய யாருமில்லை. பிரதமர் மோடி, எக்ஸ் தளம், பேஸ்புக்கில் கருத்து சொல்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாங்களும் சமூகவலைதளங்களில் பதில் அளித்துவருகிறோம்.தேசிய கல்விக்கொள்கை என்பது தமிழக மாணவர்களை ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் நுழையவிடாமல் செய்வதற்கான முயற்சி. இது தமிழகத்திற்கு தேவை இல்லை.வி.சி.க., செய்வது பொது அரசியலா அல்லது சுய அரசியலா எனத் தெரியவில்லை. வி.சி.க., மது ஒழிப்பு மாநாடு நடத்துவது அரசியல் நாடகம் தான். மத, ஜாதி அமைப்புகள், கட்சி வேறுபாடுகள் இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை எனக் கூறி அனைத்து அமைப்பினரையும் திருமாவளவன் இழிவுபடுத்துகிறார்.இப்போதைய நிலையில் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் கூட தனித்து நிற்க முடியாது. நான் தனித்து நின்றால் நானும் எனது மனைவியும் தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். கள யதார்த்தம் இதுதான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை