உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செவிலியர் தினம்

செவிலியர் தினம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்கள், செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, டாக்டர்கள், செவிலியர்களை பாராட்டி பொன்னாடைகள் போர்த்தி இனிப்பு வழங்கினார்.திருமங்கலம்: அரசு மருத்துவமனையில் உலக அன்னையர் தின விழா, உலக செவிலியர் தின விழா, செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.திருமங்கலம் அரசு மருத்துவமனையுடன் அன்னை வசந்த டிரஸ்ட் இணைந்து நடத்திய இந்த விழாவில் டிரஸ்ட் சேர்மன் அமுதவல்லி தலைமை வகித்தார். நர்சிங் சூப்பர்வைசர் ரேவதி, டிரஸ்ட் செயலாளர் சித்ரா, பொருளாளர் அருள்ஜோதி முன்னிலை வகித்தனர். தலைமை டாக்டர் ராம்குமார், டிரஸ்ட் துணைத் தலைவர் ஆறுமுகம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ