உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகைக்காக மூதாட்டி கொலை

நகைக்காக மூதாட்டி கொலை

திருச்சி : திருச்சி, திருவானைக்காவலை சேர்ந்தவர் சேஷாய அம்மாள், 95. பல ஆண்டுகளுக்கு முன் இவரது கணவரும், மகனும் இறந்து விட்டனர். இவர் தன் இரு வீடுகளை வாடகைக்கு விட்டு,அதில் கிடைத்த வருமானத்துடன், ஒரு கீற்று கொட்டகையில், தனியாக வசித்தார்.நேற்று முன்தினம் இரவு, அவர் கீற்றுக் கொட்டகையில் துாங்கிக் கொண்டிருந்த போது, மர்ம ஆசாமி ஒருவர், மூதாட்டியின் வாயை பொத்தி, துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.அதன் பின், அவர் அணிந்திருந்த தங்க செயின், தங்கத் தோடு ஆகியவற்றை கழற்றிக் கொண்டு தப்பி விட்டார். நேற்று காலை சேசாயி அம்மாள் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஸ்ரீரங்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கொலை தொடர்பாக, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ