உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லாரி மீது வேன் மோதி ஒருவர் பலி 10 பேர் காயம்

லாரி மீது வேன் மோதி ஒருவர் பலி 10 பேர் காயம்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் திடீரென நிறுத்திய லாரியின் பின்புறம் வேன் மோதியதில் ஒருவர் பலியானார். பத்து பேர் காயமடைந்தனர்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த செல்வராஜ் 58, சிவகங்கை மாவட்டம் கீழ சேவல் பட்டியைச் சேர்ந்த உறவினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது 16ம் நாள் காரியத்திற்காக அம்பாசமுத்திரத்தில் இருந்து உறவினர்கள் 10 பேருடன் வேனில் கீழசெவல்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார். வேனை முருகன் ஓட்டி வந்தார்.அதேநேரம் சிவகாசியில் இருந்து விறகு லோடு ஏற்றிய லாரியில் தேனி மாவட்டம் பெரியகுளம் டிரைவர் ஜெயராமன் மதுரை நோக்கி வந்தார். விருதுநகர் - திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை விலக்கு அருகே டீ குடிப்பதற்காக டிரைவர் லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது டிரைவர் முருகன் ஓட்டி வந்த வேன் லாரியின் பின்புறம் மோதியது.வேனில் வந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் முருகன் வேனில் வந்த உலகம்மாள் முத்துலட்சுமி ஆவுடையம்மாள் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வேனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி