உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

போக்குவரத்திற்கு லாயக்கற்ற ரோடுமதுரை அரசரடி முதல் மதுரா கோட்ஸ் பாலம் வரையுள்ள முக்கிய ரோடு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. டூவீலர், ஆட்டோவில் செல்வோர் கரடுமுரடான பள்ளங்களால் தடுக்கி விழும் நிலையுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் ரோட்டை சீரமைக்க வேண்டும்.- ராணி, காளவாசல்.ரோட்டை ஆக்கிரமித்து கட்டுமானம்ஆரப்பாளையம் விசுவாசபுரி 2வது தெரு நுழைவு வாயிலில் போக்குவரத்திற்கு இடையூறாக கட்டடம் கட்டப்படுகிறது. ஒருபுறம் கட்டடம் மறுபுறம் டிரான்ஸ்பார்மர் இருப்பதால் ரோட்டின் அகலம் சுருங்கி வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜான், விசுவாசபுரி.நிரம்பி வழியும் சாக்கடைமாட்டுத்தாவணி பிரஸ் காலனி ரோட்டில் உயர்நீதிமன்ற குடியிருப்பில் இருந்து வரும் கழிவுநீர் அடிக்கடி ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்பால் ரோட்டில் பெருக்கெடுத்துச் செல்கிறது. அருகிலுள்ள காலி பிளாட்டுகளில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்திக்கு வழிவகுக்குகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற வேண்டும்.- கணேஷ், மாட்டுத்தாவணி.பலமிழந்த பாலத்தில் பேனர்செல்லுார் பந்தல்குடி கால்வாய் பால கைப்பிடிச் சுவர் சேதமடைந்து, மூங்கில் குச்சிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் பூச்சு பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் பலமிழந்து காணப்படுகிறது. கைப்பிடிச் சுவரில் கட்சி பேனர் வைக்கப்பட்டுள்ளது. பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜூ, செல்லுார்.தெருநாய் தொல்லைசம்மட்டிபுரம் சொக்கலிங்க நகர் 7வது தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அவை விளையாடும் குழந்தைகளுக்கும், டூவீலரில் செல்வோருக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இரவில் ஊளையிடுவதால் துாக்கம் கலைகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- தினேஷ், சொக்கலிங்க நகர்.குண்டு குழி ரோடுகள்மதுரை தெற்கு மாரட் வீதி ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளன. ஆங்காங்கே பள்ளங்களால் டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். வாகனங்கள் பழுதடைந்து உடல் வலி அதிகரிக்கிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.- ரூபா, வில்லாபுரம்.அடிப்படை வசதி வேண்டும்மதுரை 20வது வார்டு மீனாட்சி நகரின் அனைத்து தெருக்களிலும் பாதாளச் சாக்கடை திட்டம், ரோடுகள் அமைத்துள்ளனர். ரோடுகள் சீரற்று உள்ளதால் அவற்றை உடனே சீரமைக்க வேண்டும். மழைக்காலங்களில் காலிமனையில் தண்ணீர் தேங்குகிறது. குப்பை அள்ள வாரம் இருமுறை மட்டுமே வருவதால் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. விரைந்து பிரச்னையை தீர்க்க வேண்டும்.--கனகபரமேஸ்வரி, மீனட்சிநகர்குப்பையும் கழிவுநீரும்...மதுரையில் புதுராமநாதபுரம் ரோடு பாலதண்டாயுதபாணி கோயில் எதிரே நரசிம்மபுரம் தெரு நுழைவில் பனையூர் மழைநீர் வடிகால் கால்வாய் செல்கிறது. அதில் குப்பை தேங்கி கழிவுநீராக மாறியுள்ளது. துர்நாற்றத்துடன் கொசு உற்பத்தி பெருகி அவதிப்படுகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும்.- கோபால், நரசிம்மபுரம்.---கொசுக்களால் அவதி47வது வார்டு தெற்கு மாரட் வீதி தனியார் மருத்துவமனை பின்புறம் தெர்மாகோல் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன அதில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகுகிறது. இதனால் இரவில் மக்கள் துாக்கத்தை தொலைத்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் பெட்டிகளை உடனே அகற்ற வேண்டும்.- அஷோக், தெற்குவாசல்.அடிப்படை வசதி இல்லை20வது வார்டு விளாங்குடி மீனாட்சி நகர் பழைய பாண்டியன் தியேட்டர் அருகே பாதாள சாக்கடை, ரோடு அமைக்கும் பணிகள் நடக்கவில்லை. பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இப் பகுதியில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை. இதனால் மழைக் காலங்களில் இன்னல்களுக்கு ஆளாகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை, ரோடு பணிகளை விரைந்து துவங்கவேண்டும்.- பாண்டியராஜன், விளாங்குடி.ஆம்புலன்சுக்கு வழியில்லைவாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் செல்ல நீதிமன்ற உத்தரவுப்படி ரோடுகளில் வெள்ளை நிறம் பூசப்பட்டுள்ளது. அங்கு பஸ்களை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு ஏற்படுத்துகின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கவுரிநாதன், சோழவந்தான்.குப்பை எரிப்பால் அவதிகடச்சனேந்தல் அருகே ஒத்தக்கடை செல்லும் ரோட்டில் குப்பையை துாய்மை பணியாளர்கள் ரோட்டோரம் குவித்து எரிப்பதால் புகை சூழ்ந்து வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். அப்பகுதியினர் மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. குப்பையை குடியிருப்புகள் அருகே பொது இடங்களில் எரிப்பதை தடுக்க வேண்டும்.- அழகர், கடச்சனேந்தல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி