மேலும் செய்திகள்
குன்றத்தில் வேல் யாத்திரை நிறைவு
15 hour(s) ago
வனவிலங்குகளால் விவசாயிகள் பாதிப்பு
15 hour(s) ago
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் நெல் அறுவடை பணிகள் முடியும் தறுவாயில் உள்ளதால் அதனை கொள்முதல் செய்வதில் வியாபாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜனவரியில் பெய்த மழையால் கண்மாய்களில் விவசாயத்துக்கு தேவையான அளவு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. இதனால் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். நெல் விளைச்சல் நன்றாக இருந்ததால், விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இதனையடுத்து கடந்த ஜூன் முதல் நெல் அறுவடை படிப்படியாக துவங்கியது. நெல் விளைச்சல் நடந்த வயல்களில் கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நெல் அறுவடை நடக்கிறது. பெரும்பாலான வயல்களில் அறுவடை முடிந்து நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளியூர் வியாபாரிகளும் வந்து நேரடி கொள்முதல் செய்து வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். அறுவடையின் போது கிடைத்த வைக்கோலை கொள்முதல் செய்யவும் அதற்கான வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago