உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீட் தேர்வு வரப்பிரசாதம் பம்மல் ராமகிருஷ்ணன் பேச்சு

நீட் தேர்வு வரப்பிரசாதம் பம்மல் ராமகிருஷ்ணன் பேச்சு

மதுரை : ''நீட் தேர்வு நம் சமுதாய குழந்தைகளுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்'' என தமிழ்நாடு பிராமணர் சங்க ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் மதுரையில் பேசினார்.சங்கத்தின் மதுரைக் கிளை சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பைபாஸ் ரோடு சிருங்கேரி திருமண மகாலில் நடந்தது. தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். நகர் கிளை பொதுச் செயலாளர் பாபு வரவேற்றார். மாநில தலைவர் கணேசன் பரிசுகளை வழங்கினார்.மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசியதாவது:கல்வி, உழைப்பு, அறிவாற்றலால் முன்னேறியது பிராமணர் சமுதாயம். நாட்டின் சுதந்திரம், தமிழுக்காக உழைத்துள்ளது. உ.வே.சா., இல்லையெனில் தமிழ் இல்லை. நீட் தேர்வில் ஒடிசா, ம.பி., ஜார்கண்ட் உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுகின்றனர்.பிற மாநிலங்களில் யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. தமிழகத்தில் மட்டுமே திட்டமிட்டு எதிராக பிரசாரம் நடக்கிறது. நீட் தேர்வு நம் சமுதாய குழந்தைகளுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம். நாம் இழந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது.இது ஜாதி சங்கம் அல்ல. சமுதாய இயக்கம். நாம் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம் என்றார்.சங்க மாநில துணைத் தலைவர் அமுதன், துணை பொதுச் செயலாளர் பக்தவச்சலம், சிருங்கேரி மடத்தின் தர்மாதிகாரி நடேசராஜா, எஸ்.ஆர்.எஸ்.,பிரதர்ஸ் நிர்வாக இயக்குனர் சங்கரன், ஜோதிடர் லட்சுமணன் பங்கேற்றனர். பொருளாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !