உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா

மேலுார் : வெள்ளலுார் நாட்டில் செம்புலி கரையை சேர்ந்தவர்கள் ஆனி மாத புரவி எடுப்பு திருவிழா கொண்டாடினர். ஜூன் 14 முதல் பக்தர்கள் வெள்ளலுார் மந்தையில் கச்சை கட்டி சாமியாடினர். ஜூன் 23 புரவிகள் செய்ய பிடிமண் கொடுக்கப்பட்டது. நேற்று வெள்ளலுார் நாட்டின் பல கிராமங்களில் இருந்து பழையூர்பட்டிக்கு சென்று புரவிகளை சுமந்து வெள்ளலுார் மந்தைக்கு கொண்டு வந்தனர். இன்று (ஜூன் 30) மந்தையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள வெளிச்சிகுளத்து அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை