| ADDED : ஆக 07, 2024 05:36 AM
மதுரை : தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை களைய வேண்டும். காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். காசில்லா மருத்துவம், முன்பணம் இல்லா சிகிச்சை என்பது கானல் நீராகி போவதை தடுக்க வேண்டும். மருத்துவமனையில் செலவு செய்யும் தொகைக்கும், காப்பீடுநிறுவனம் முழுச் செலவு தொகையையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சொக்கலிங்கம், தங்கவேல், ஆதரமிளகி, தினகரசாமி, இணைச் செயலாளர்கள் சந்திரசேகரன், அடைக்கண், பானு முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர் நாராயணன் வரவேற்றார். செயலாளர் பாலமுருகன் கோரிக்கையை விளக்கினார். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பேசினர்.