உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

லாட்டரி விற்பனை: ரூ.4.51 லட்சம் பறிமுதல்மதுரை: தெற்குவாசல் வெங்கடேசன் 55. தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடையுள்ள நிலையில் கேரளாவில் இருந்து வாங்கி வந்து அலைபேசி மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு விற்று வந்தார். அவரிடம் இருந்து மொத்தம் ரூ.4.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து 77 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆசிரியை வீட்டில் திருட்டு திருமங்கலம்: கள்ளிக்குடி கார்த்திக் ராஜா. இவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஆசிரியை. நேற்று முன்தினம் காலை இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் சாப்பிட கார்த்திக் ராஜா வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !