உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

தலை வைத்து தற்கொலை திருப்பரங்குன்றம்: நிலையூர் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் 24 வயது நபர் இறந்து கிடந்தார். எஸ்.ஐ. கேசவன் விசாரணையில், இறந்தவர் மேல அனுப்பானடி அம்பேத்கார் நகர் கண்ணன் மகன் மணிகண்டன் எனத்தெரிந்தது. இருவரும் கொத்தனார்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மூடைக்குள் பெண் உடல்பெருங்குடி: விமான நிலையம் செல்லும் ரோட்டில் ஈச்சனேரி பகுதி முட்புதரில் துர்நாற்றத்துடன் சாக்கு மூடை கிடந்தது. அதில் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. மார்பு பகுதியில் இரண்டு காயங்கள் இருந்தன. முகம் முழுவதும் சேதமடைந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்தில் விசாரித்தார். கொத்தனார் பலிபேரையூர்: சந்தையூர் இந்திரா காலனி காளிமுத்து 32. கொத்தனார். நேற்று முன்தினம் இரவு பேரையூரில் இருந்து சந்தையூருக்கு டூவீலரில் எஸ்.கீழப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மண் அள்ளும் இயந்திரம் மோதியதில் இறந்தார். டிரைவர் எஸ்.கீழப்பட்டி முத்துக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை