| ADDED : ஜூன் 13, 2024 06:32 AM
ரவுடி கொலையில் -------------------5 பேர் கைதுஅலங்காநல்லுார்: கோவில்பாப்பாக்குடி சின்னக் கண்மாய் தெரு காசிவிஸ்வநாதன் மகன் சூர்யா 24, இவர் மீது கொலை, பெட்ரோல் குண்டு வீச்சு, கஞ்சா வழக்குகள் உள்ளன. ஜாமினில் வெளியே வந்த சூர்யாவை ஜூன் 9ல் வீட்டின் அருகே ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பியது. அலங்காநல்லுார் போலீசார் விசாரித்தனர்.2022ல் கோவில்பாப்பாகுடியில் மனைவியுடன் வசித்த மதுரை பெத்தனியாபுரம் ரவியை, சிறு தகராறில் சூர்யா, அவரது நண்பர் கொலை செய்தனர். இதற்கு பழிக்குப் பழியாக ரவியின் சகோதரர் வடிவேல் 36, உறவினர்கள் சிவா 26, சக்திவேல் 24, மற்றும் சிரஞ்சீவி 24, கிருபா 23, ஆகியோர் சூர்யாவை கொலை செய்தது தெரிந்தது. போலீசார் 5 பேரை கைது செய்தனர்.வாகனம் மோதி ஒருவர் பலிபேரையூர்: ஜாரி உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி 64. ஊராட்சியில் தண்ணீர் திறப்பவர். இவர் நேற்று காலை கோபால்சாமி மலைப்பகுதியில் பால் வாங்கிக் கொண்டு மதுரை- ராஜபாளையம் சாலையில் நடந்து சென்றார். அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பறந்தது. சம்பவ இடத்திலேயே முனியாண்டி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.மாடு மோதி பெண் பலிதிருமங்கலம்: பி.அம்மாபட்டியை சேர்ந்தவர் பாக்கியம் 70, நேற்று முன்தினம் அரசு பள்ளி அருகே ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார். அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் தனது மாடுகளுடன் அப் பகுதியை கடந்து சென்றார். அப்போது திடீரென மிரண்ட ஒருமாடு, பாக்கியத்தின் மீது மோதியதில் அதிர்ச்சியில் கீழே விழுந்தார். தலையில் காயம் அடைந்த அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--பஸ் மோதி ஒருவர் பலிஉசிலம்பட்டி: அய்யனார்குளத்தைச் சேர்ந்தவர் பெரியதேவர் மணித்தேவர் 71. மதுரை ஆலங்குளம் இமயம் நகரில் வசித்து வந்தார். நேற்று உறவினர் வீட்டு விேஷசத்திற்காக டூவீலரில் (ஹெல்மெட் அணியாமல்) உசிலம்பட்டிக்கு வந்தார். மதியம் 12:00 மணிக்கு திருமங்கலம் விலக்கு அருகே, இவரது பின்னால் வந்த கம்பம் பஸ் மோதி பலியானார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.ரேஷன் அரிசி ----------------------------------------கடத்தியோர் கைதுமதுரை: உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் டி.எஸ்.பி., ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., முத்துராஜா, பறக்கும்படை தாசில்தார் ராமச்சந்திரன் குழுவினர் அனுப்பானடி ரயில்வே கேட் அருகே வாகன சோதனை நடத்தினர். வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதற்காக நான்கு சக்கர வாகனத்தில் 1360 கிலோ ரேஷன் அரிசியை கொண்டு சென்றது தெரிந்தது. வாகன உரிமையாளர் மேலஅனுப்பானடி ஆனந்தராம் 41, காமராஜர்புரத்தை சேர்ந்த டிரைவர் ஹரிஹரன் 25, ஆகியோரை கைது செய்தனர்.டேங்கர் லாரி மோதி பெண் பலிமதுரை: மதுரை அருகே பூதக்குடி கோவர்த்தனபுரம் வாகைகுளத்தை சேர்ந்தவர் மல்லு கருப்பு. இவர் மனைவி தனலட்சுமி 55. இருவரும் பைக்கில் சென்றனர். விளாங்குடி அருகே பைக் மீது பெட்ரோல் டேங்கர் லாரி மோதியது. இதில் மல்லு கருப்பு காயத்துடன் தப்பினார். தனலட்சுமி கழுத்தில் லாரி சக்கரம் ஏறியதால் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.