உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

ஏரியா கேட்டு தாக்குதல்

மதுரை: அவனியாபுரம் வெற்றிச்செல்வி 50. அரசு பள்ளி ஆசிரியை. கணவர் சந்திரமோகன் கம்ப்யூட்டர் பார்க் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். டூவீலரில் சென்றபோது பராசக்தி நகரில் பஞ்சரானது. அப்போது அங்கு வந்த 2 பேர், 'எங்க ஏரியாவில் உனக்கென்ன வேலை. நீ எந்த ஏரியா' என கேட்டு கல்லால் தாக்கினர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

'ரீல்ஸ்' வெளியிட்டவர் மீது வழக்கு

மதுரை: வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி சரண். இவரது 'திருடன் சரண்' என்ற இன்ஸ்டா சமூகவலைத்தளத்தில் 'ஹவுசிங் போர்டு விரைவில் பதறும். தலை சிதறும்' என வாசகங்களை பதிவிட்டு 'ரீல்ஸ்' வெளியிட்டார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக சதீஷ்குமார் என்பவர் புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கண்மாயில் மூழ்கி முதியவர் பலி

சத்திரப்பட்டி: வி. மீனாட்சிபுரம் பாண்டி 50. நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு காளையை அப்பகுதி கண்மாயில் குளிக்க வைத்த போது மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை