உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ராணுவ வீரர் பலி

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா வில்லுார் அருகே வி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பழனிச்சாமி 72, விவசாய வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வில்லுாரில் இருந்து கள்ளிக்குடிக்கு சென்றார். மதுரை - விருதுநகர் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற போது மதுரை சென்ற கார் மோதி காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார். மதுரை அச்சம்பட்டி கார் டிரைவர் சுரேஷிடம் கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் திருட்டு

அலங்காநல்லுார்: குலமங்கலம் ரோடு வடுகபட்டி ராம்குமார் 32, தனியார் நிறுவன மேலாளர். இவர் நேற்று முன்தினம் தந்தையை தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது, உள்ளே சென்று பார்த்தபோது சாவி மூலம் பீரோவை திறந்து 8 பவுன் நகை திருடப்பட்டது தெரிந்தது. அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை